--> -->

அமைச்சு தொடர்பாக

2024, நவம்பர் 25, ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல 2412/08 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் விடயங்களும் பணிகளும்:

01.விடய எல்லை

      தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை முன்னுரிமையாகக்கொண்டு இலங்கையை இறைமைபொருந்திய ஒற்றையாட்சி நாடாக மக்களின் அபிலாஷைகளைக் கட்டிக்காத்து உறுதிப்படுத்துதல்.

02.கடமைகளும் பணிகளும்

1.     'சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாகவும் அரசினால் செயற்படுத்தப்படுகின்ற தேசிய கொள்கைகளுக்கு அமைவாகவும் ''பாதுகாப்பான நாட்டினை"" உருவாக்குவதற்காக உரிய இராஜாங்க அமைச்சுக்களுக்கு கொள்கைரீதியான வழிகாட்டல் வழங்குதலும் விதித்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளுக்கு அமைய பாதுகாப்பு விடயத்துடன் தொடர்பான கொள்கையாக்கங்கள், தேசிய வரவு செலவு, அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி எனும் வேலைத்திட்டத்தின் கீழுள்ள கருத்திட்டங்களைச் செயற்படுத்தலும் பின்வரும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் பணிகளுடனும் மற்றும் அதற்குரிய கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்களை ஆக்குதலும் செயற்படுத்தலும் தொடராய்வு செய்தலும் மதிப்பிடுதலும்.

2.     தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

3.  நாட்டின் இராணுவப் பாதுகாப்பினைப்போன்று இராஜதந்திர ரீதியான பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதோடு குற்றங்கள், போதைப்பொருள், பணமோசடி மற்றும் ஊழல்களிலிருந்து நாட்டை மீட்டுக் கொள்வதற்குத் தேவையான சகல பணிகளையும் மேற்கொள்ளுதல்.

4.   அரசாங்க மற்றும் தனியார் பொருளாதாரச் செயற்பாடுகள்போன்று உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்கும் பாதுகாப்புச் சூழலொன்றையும் நாட்டினுள் உருவாக்குதல்.

03.அதிவிசேட முன்னுரிமைகள்

1.    உள்நாட்டுக் கலவரங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் என்பவற்றைத் தடுத்தல் மற்றும் வெளித்தாக்கங்களிலிருந்து பாதுகாத்தல்.

2.    கடல் எல்லைகளை மீறிச் செய்யப்படும் சட்டவிரோத பொருள்களை கடத்தல் மற்றும் சேவைகளைத் தடுத்தல்.

3.    போதைப்பொருள் இடையூறிலிருந்து விடுபட்டதொரு நாட்டை உருவாக்குவதற்காகப் போதைப்பொருட்கள் இந்நாட்டுக்கு உள்வருவதைத் தடுத்தல், போதைப்பொருள் இடையூறைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருள் இடையூறுகளுக்குப் பலியாவதைத் தடுத்தல், போதைப்பொருள்கள் இடையூறுகளுக்கு ஆளானவர்களுக்குப் புனர்வாழ்வளித்தலுடன் தொடர்பான சனாதிபதிச் செயலணியுடன் இணைந்து செயற்படுதல்.

04.உரிய தாபன மற்றும் சட்டரீதிச் சட்டகம்

திணைக்களங்களும் நியதிச்சட்ட நிறுவனங்களும் அரச கூட்டுத்தாபனங்களும்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்களும் சட்டவிதிகளும்

1.     பாதுகாப்பு பதவிநிலைத் தலைவரின் அலுவலகம்

2.     இலங்கைத் தரைப்படை

3.     இலங்கைக் கடற்படை

4.     இலங்கை வான்படை

5.     அரச புலனாய்வுச் சேவை

6.     இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்

7.     சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்

8.     பாதுகாப்புச் சேவைகள் கட்டளை, பதவிநிலைக் கல்லூரி

9.     தேசிய பயிலிளவல் சிறப்பணி

10. மிலோதா நிறுவனம் (நிதியியல் கற்கைகளுக்கான நிறுவனம் ) கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக

(2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க) பாதுகாப்புப் பணியாடடொகுதியினரின் தலைமையதிகாரிச் சட்டம்

தரைப்படைச் சட்டம் (1949 ஆம் ஆண்டின் 17ஆம்இலக்க)

கடற்படைச் சட்டம் (1950 ஆம் ஆண்டின் 34 ஆம்இலக்க)

வான்படைச் சட்டம்(1949 ஆம் ஆண்டின் 41 ஆம்இலக்க)

(2009ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க) கரையோரப் பாதுகாப்புத் திணைக்களச் சட்டம்

(1977ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க ) புறத்தொப்படைத்தல் சட்டம்

(2008ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க) பாதுகாப்புச் சேவைகள் ஆணை மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரிச் சட்டம்

( 19 6 ஆம் ஆண்டின் 2 1ஆம் இலக்க ) வெடிப்பொருட்கள் சட்டம்

( 1916ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க ) சுடுபடைக்கலன்கள் சட்டம்

(1985ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க) பயன்பாடுகள் மற்றும் குறைநிரப்புச் சட்டம்

(1966ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க) தீங்குவிளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்

(2001ஆம ஆண்டின் 09ஆம் இலக்க) கடற் கொள் ளைச் சட்டம்

(1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

(1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க)பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம்

(1981ஆம் ஆண்டின் 68ஆம் இலக்க) சேர் ஜோன்கொத்தலாவல அரச பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரிச் சட்டம்

( 1999ஆம் ஆண்டின் 11ஆம் இ லக்க )பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களைஅடக்குதல் சட்டம்

(2000ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க) கடல்சார் கடறசெலவின் பாதுகாப்புக்கெதிரான சட்டமுறையற்ற செயல்களை அடக்குதல் சட்டம்