பாதுகாப்பு செய்திகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண ஆதவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1000 பாடசாலைகளை சுத்தம்
செய்யும் திட்டத்திற்கு முப்படைகளின் ஆதரவு
ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வருடம் (2025) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளின் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்து பழுதடைந்த கதிரை மேசைகள் உட்பட பாடசாலை உபகரணங்களை பழுதுபார்க்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
"Defender of the Fatherland's Day" விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்
கொழும்பு Galle Face Hotel லில் புதன்கிழமை (பெப்ரவரி 19) நடைபெற்ற "Defender of the Fatherland's Day" விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), 1957 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் வளர்ந்துவரும் உறவை வலியுறுத்தினார்.
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில்
அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, இன்று (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.
உலக இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின்
வெற்றிகரமான சர்வதேச இராணுவ பேரவை ஓட்டம்
உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளிடையே உடற்தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி ஸ்தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டை
செய்யும் வைபவம் குறித்து விசேட கலந்துரையாடல் நடைப்பெற்றது
நீலகிரி ஸ்தூபியின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் 04, (2025) ஸ்துபியில் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களைப் பிரதிஷ்டை செய்யும் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
“சுத்தமான இலங்கை” திட்டத்தின் பயிற்சியாளர்களைப்
பயிற்றுவிப்பதற்கான ஒரு கருத்தரங்கு
“சுத்தமான இலங்கை” திட்டத்தை முறையாக செயல்படுத்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸின் தெரிவுசெய்யப்பட்ட 150 உறுப்பினர்களைப் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்கான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 18) பனாகொடை இலங்கை இலகுரக காலாட்படை படைப்பிரிவு வளாகத்தில் ஆரம்பமாகியது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) வரவேற்பு உரையை நிகழ்த்தி, பங்கேற்ற அனைத்து அதிகாரிகளையும் கருத்தரங்கிற்கு வரவேற்றார்.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 16) ஆம் தேதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் தெல்கொட Tamarind Banquet மண்டபத்தில் நடைபெற்றது. விழா விற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) வரவேற்றார்.
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI BUNG TOMO - 357 இலங்கை விஜயம்
நல்லெண்னண விஜயமொன்றை மேட்கொண்டு இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI BUNG TOMO - 357 நேற்று (பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினால் வரேவேட்பளிக்கப்பட்டது என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) 8வது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார் . இந்த விழா நேற்று (பெப்ரவரி 14) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.
தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்புச் செயலாளரைச் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்
தேசிய மாணவர் படையணியின் வெளிச்செல்லும் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த பொன்சேக்கா இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழகிழமை (பிப்ரவரி 13) விமானப்படைத் தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சர் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டு, ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் நீர்வரைவியல் தொடர்பில் இருதரப்பு
ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான முயட்சியின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகம் (SLNHO) மற்றும் ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகம் (UKHO) ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது இலங்கையின் நீர்வரைவியல் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வருவாய் உருவாக்கம் உள்ளிட்ட நீர்வரைவியல் தொடர்பான ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலை 2 இலங்கை இராணுவ வைத்திய படையின் 11வது குழுவினரின் தென்
சூடான் ஐநா அமைதி காக்கும் பணி ஆரம்பம்
தென் சூடான் ஐ.நா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையின் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் வியாழக்கிழமை (13) தனது பணியைத் தொடங்கினர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் சிவில் பாதுகாப்பு
திணைக்களத்திற்கு விஜயம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) மொரட்டுவையில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இது அவர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு மேட்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயமாகும்.
உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ
தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) தூதுக்குழு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு விஜயம்
ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்ணல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 11) பத்தரமுல்லையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்திற்கு (INSS) விஜயம் செய்தது.
இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை- இந்திய
பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு
இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை (பெப்ரவரி 11) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி
தூதுக்குழு பாதுகாப்பு அமைச்சசுக்கு விஜயம்
ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (RDFCSC) கல்வித் துறைத் தலைவர் கேர்னல் லௌசேன் செங்கிமானா இங்காபைரே தலைமையிலான தூதுக்குழு இன்று (பெப்ரவரி 11) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஜயம் செய்தது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்
தேசிய வளர்ச்சி மற்றும் கொள்கை செயல்படுத்தலை ஆதரிப்பதில் கடற்படை வீரர்களின் முக்கிய பங்கையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர்
பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று (பிப்ரவரி 10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.