இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் அதன் ஆயுதப்படை நினைவு தின பொப்பி குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டும் பொப்பி தின விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள யுத்த வீரர் நினைவு தூபியில் நவம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவு கடந்த செவ்வாயன்று (நவம்பர் 19) கொழும்பு துறைமுகத்தில் கூட்டு பயிற்சியை ஒன்றை நடத்தியது. மொன்டானா நேஷனல் கார்ட், அமெரிக்க கடலோர காவல்படை (மாவட்டம் 13) மற்றும் இலங்கையை விமானப்படை உடன் கூட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் Subject Matter Expert Exchange (SMEE) பரிமாற்ற நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு இக்கூட்டு பயிட்சி நடத்தப்பட்டதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான சர்வதேச குடியேற்ற அமைப்பின் (IOM) தூதுவர் கிறிஸ்டின் பி பார்கோ (Ms. Kristin B. Parco) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் இன்று (நவம்பர் 20) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இன்று (நவம்பர் 19) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
"இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்ற தாக்கங்கள், பொருளாதார பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்றவை பாரம்பரிய இராணுவ சவால்களுடன் குறுக்கிடும் ஒரு சகாப்தத்தில் நாங்கள் வாழ்கிறோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், நமது பிரதேசம், உலகளாவிய கடல் வர்த்தகம் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க சந்தியில் அமைந்திருக்கிறது. எங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க மரபுவழி இராணுவ முன்மாதிரிகளை தாண்டி சிந்திக்கக்கூடிய தலைவர்கள் தேவை”.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் ‘JMSDF SAMIDARE’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை விமானப்படையின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் (AFESA) செயற்குழு பிரதிநிதிகள் இன்று (நவம்பர் 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சந்தித்தனர்.
தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பின் (COSATT) பணிப்பாளர் கலாநிதி நிஸ்சல் என். பாண்டே, இன்று (நவ. 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்ககள், மாகாண சபை உறுப்பினர்ககள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தற்பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் ரவை துப்பாக்கிகள் குறிப்பிடத்தக்களவு உள்ளதை பாதுகாப்பு அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
Tamil
மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு பல்வேறு வடிவங்களில் ஆட்சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான INS வேலா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கிழக்கு மாகாணத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறுகம்பே பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கண்டறிந்தார்.
இலங்கை இராணுவத்தின் 12வது இலங்கை தேசிய பாதுகாப்புப் (SLNG) படையினர், மட்டக்களப்பு குடிம்பிமலை குமரன் வித்தியாலயத்தில், RO நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை நிறுவியுள்ளதாக இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் (SLCG) பணிப்பாளர் நாயகம் (DG) ரியர் அட்மிரல் ராஜப்பிரிய சேரசிங்க கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் வியாழக்கிழமை (நவம்பர் 07) சந்தித்தார்.
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024.11.07ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு 2024.10.06ஆம் திகதி ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அட்மிரல் (ஓய்வு) ஹெரி ஹரிஸ் தலைமையிலான அமெரிக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (NDU) தூதுக்குழுவினர் இன்று (நவம்பர் 7) இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு (NDC) இன்று (நவம்பர் 07) விஜயம் மேற்கொண்டார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில தொலகே இன்று (ஜூலை 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின் கடற்படை தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று (நவம்பர் 06) மேற்கொண்டார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அண்டலிப் எலியாஸ், கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவ. 06) சந்தித்தார்.