பாதுகாப்பு செய்திகள்



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ மருத்துவத் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி

உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் அண்மையில் நடைபெற்றது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 7வது வருடாந்த பாதுகாப்பு உரையாடல் இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 03 விசேட கார்கள் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் கார்கள் (All-Terrain Vehicles - ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதியிடம் (பெப்ரவரி 22) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘விரு சிசு பிரதீப’ திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கிவைப்பு

உயிரிழந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் இராணுவ குடும்பங்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் இராணுவ சேவா வனிதா பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இராணுவத் தலைமையகத்தில் (பெப்ரவரி 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவன ஊழியர்களின்
தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதலுக்கான திட்டங்கள் முன்னெடுப்பு

இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் அதன் பணியாளர்களுக்கான தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துதல் எனும் தொனிப்பொருளிலான தலைமைத்துவ விரிவுரையொன்று முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா. அமைதிகாக்கும் படையில் சேவையாற்றிய
இலங்கை படைவீரரின் பூதவுடல் இலங்கைக்கு

ஐ.நா. அமைதிகாக்கும் படையின் மாலியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் மாரடைப்பால் இறந்த 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடல் புதன்கிழமை (பெப்ரவரி 22) பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடல் பேழை இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினரால் இராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

74வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 பட்டத்தை இலங்கை
விமானப்படை மகளிர் அணி கைப்பற்றியது

இலங்கை விமானப்படையின் மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் 74வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் சம்பியனாகத் தெரிவானார்கள்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மறைந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரியவின் பூதவுடலுக்கு
மாலியில் உள்ள ஐ.நா படையினர் அஞ்சலி

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் (மினுஸ்மா) படையினர் (16) வியாழக்கிழமை, 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மறைந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதனால் மினுஸ்மா பமகோ தளம் – 3 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 11 பெப்ரவரி 2023 அன்று காலமானார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ படையினரால் கெரண்டியெல்ல மலையில் வழிதவறிய உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

உடுதும்பர மலைத்தொடரின் கெரண்டியெல்ல மலைஉச்சியில் வழிதவறிய உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 19) இலங்கை இராணுவப் படையினரால் மீட்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை கடற்படை கைப்பற்றியது

கொழும்பில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடற்படையின் ஆடவர் மல்யுத்த அணி தொடர்ச்சியாக 20வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதுளையில் ஏற்பட்ட காட்டுத் தீயை விமானப்படை அணைத்தது

கந்தேபுஹுல்பொல வனப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயை இலங்கை விமானப்படையினர் அணைத்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்தோனேஷிய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம்

ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் தளபதிகளுக்கான
தெற்காசிய சர்வதேச மாநாடு - 2023

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியுடன் இணைந்து சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் பெப்ரவரி 14-15 திகதிகளில் இரண்டாவது ‘தெற்காசிய சர்வதேச தளபதிகள் மாநாடு’ நடாத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் தொழில்முறை இராணுவக் கல்வியின் தற்போதைய சூழல்கள் மற்றும் எதிர்காலம் என்பன பற்றிய ஒரு தனித்துவமான இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் வருடாந்த ஓட்டம் - 2023
பாதுகாப்புச் செயலர் கலந்து கொண்டார்

இலங்கை விமானப்படையால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) தின ஓட்டம் இன்று (பிப்ரவரி 18) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போர்வீரர் நினைவுத் தூபியை
பிரதமர் திறந்து வைத்தார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போர்வீரர் நினைவுத் தூபியை கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (பிப்ரவரி 17) திறந்து வைத்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி 17) பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள வரையறுக்கப்பட்ட ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்கா உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்தார்

இந்து- பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி றொயல் தலைமையிலான தூதுக்குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (பெப்ரவரி 16)  இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறந்த கடற்படைக் கப்பலாக ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையின் வருடாந்த சிறந்த கப்பல் போட்டியில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.