--> -->
இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களுக்கு 'பொப்பி மலர்’ அணிவித்தனர்.
Tamil
இலங்கை கடலோர பாதுகாப்புபடை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்து ஓய்வுபெறவுள்ள ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர் 11) சந்தித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலபதுவ ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட சங்கவாசக் கட்டிடம் இன்று (அக்டோபர் 10) முற்பகல் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமய நிகழ்வின் போது திறந்து வைக்கப்பட்டு மகா சங்கத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பச் அவர்கள் இன்று (அக். 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என;று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அவுஸ்திரேலிய தூதுக்குழுவொன்று நேற்று (ஒக்டோபர் 05) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
• கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் முழு அளவிலான கணனி கற்கைகள் பீடம் ஆரம்பித்து வைப்பு
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள் இன்று (அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.
இன்று (30) நண்பகல் 1200 மணிக்கு வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதுக்குழு வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவ் விஜயத்தின் போது, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தூதுவர் திரு ரவுல் இம்பாச்> பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு கவுடென்ஸ் ரஸ்ட்> சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் (SLCG) ஆகியோர் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர்.
மத்திய ஆபிரிக்க குடியரசின் பிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 7வது விமானப் படையணிக்கான ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கான பதக்கம் வழங்கும் அணிவகுப்பு அண்மையில் (செப். 21) நடைபெற்றது