வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 06) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்.
காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (நவம்பர் 05) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கைச்சாத்திடப்பட்டது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான பத்து மாடி கட்டிடம் நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH) மற்றும் Colors of Courage Trust (Garantee) Limited (COC)) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிர்மாண வேலைகளுக்கான ஆள்பலம் இலங்கை இராணுவத்தினால் இலவசமாக வழங்கப்படும்.
இந்திய எழுத்தாளர் நிதின் ஏ கொகலே இன்று (நவம்பர் 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பட்ரிக் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவம்பர் 05) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
“ஜனாதிபதியின் தலைமையின் கீழ், அரசாங்கதின் கவனம் வெறும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்ததல் மட்டுமின்றி உண்மையான மீள்தன்மை கட்டியெழுப்புவதை நோக்கி நகர்ந்துள்ளது'.
பௌத்த விகாரைகள் உட்பட வழிப்பாட்டு தலங்களின் பாதுகாப்பை முறையாகப் பேணுவதற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று துன்ஹிந்த - பதுளை வீதியில் அம்பகாஸ் சந்தியில் (நவம்பர் 01) காலை 0745 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பஸ்ஸில் பயணித்த 42 பேர் கொண்ட குழுவில் கொத்தலாவல பல்கலைக்கழக39வது ஆட்சேர்ப்பின் 36 மாணவர்கள், 3 விரிவுரையாளர்கள், குழுவிற்குப் பொறுப்பான பயிற்றுவிப்பாளர், பஸ்ஸிற்குப் பொறுப்பான மூத்த இராணுவ வீரர் மற்றும் பஸ் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி அலிரெசா டெல்கோஷ், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவ. 01) இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஹோமாகம, பிட்டிப்பனவில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு (CDRD) நேற்று (அக் 30) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படையிடம் (SLAF) செவ்வாய்க்கிழமை (அக் 29) முறைப்படி கையளிக்கப்பட்டது.
Tamil
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 28) விஜயம் செய்தார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அகுரேகொடவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயவென அப்பகுதிக்கான கண்காணிப்பு வியமொன்றினை இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்டார்.
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினண்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டியவினால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவுக்கு (ஓய்வு) இன்று (அக் 25) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS), "இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அதன் பங்களிப்புகள்" என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 24, 2024) பாதுகாப்பு அமைச்சின் "நந்திமித்ர கேட்போர் கூடத்தில்" பொது விரிவுரை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இலங்கை விமானப்படை (SLAF) திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தனது வருடாந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தியது. மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா சங்கத்தினர், மாணவர் பிக்குகள் மற்றும் ஆலய ஊழியர்களின் நலனுக்காக 6வது முறையாக இம்மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாக விமானப்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் இன்று (அக்டோபர் 23) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவுக்காக இலங்கை கடற்படையினரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு (RO) இயந்திரம் நேற்று (அக் 21) திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தகவல்களுக்கமைய, இது கடற்படை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட 30வது மருத்துவ தர RO நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும் ஆகும்.
கேர்ணல் லாரா தெரேஸ் ட்ராய் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக் 21) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தது.
இலங்கை கடற்படையின் (SLN) 4வது ஃபாஸ்ட் அட்டாக் புளோட்டில்லா (4 FAF) படையணி அதன் முன்னாள் யுத்த வீரர்களை பாராட்டி கௌரவித்துள்ளது. கடற்படை தகவல்களுக்கமைய, திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள 4 FAF போர் போர் நினைவகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19) முதற் தடவையாக நடத்தப்பட்ட இவ்விழாவில் யுத்தத்தின் போது காயமடைந்த (WIA) 4 FAF வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.