--> -->
58 படைப்பிரிவின் கீழுள்ள 581 பிரிவின் 1 வது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு காலாட்படை படையினர் நேற்று (1) மாலை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (ஆகஸ்ட் 01) மாத்தறை, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அவற்றின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 29). இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Tamil
கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.
இலங்கை இராணுவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சந்திரபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பமொன்றிற்கு அண்மையில் புதிய வீடொன்றை நிர்மாணித்து கையளித்தது.
இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை விமானப்படையின் அனுராதபுரம் தளத்தினால் அண்மையில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் அனுராதபுரம் பலுகஸ்வெவ மைத்திரிகமவில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான 'ஜயசாகர' விற்கு ஆணை அதிகாரம் அளிக்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக நகரில் இன்று (ஜூலை, 23) இடம் பெற்றது.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொதுப் பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். 2022 ஜூலை 22 ஆம் திகதி அதாவது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுள்ளன.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (ஜூலை 21, 2022) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2022 ஜூலை 19 வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022இன் பிரகாரம் இலங்கையை அடுக்கு 2 ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசுரினா கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதியில் நேற்று (ஜூலை 19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.