--> -->
இலங்கை இராணுவம் (SLA) அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அமைவாக முதல் கட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடும் திட்டம் தம்புத்தேகம நிராவிய இராணுவப் பண்ணையில் நேற்று (ஜூன் 27) ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை தனது யுத்த வீரர்களை நினைவு கூறி “போர்வீரர்கள் நினைவேந்தல் விழா 2022” நிகழ்வை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் அனுசரணையின் கீழ் ஏக்கலையிலுள்ள அதன் பயிற்சி பாசறையில் விமானப்படை போர் வீரர் நினைவகத்தில் அண்மையில் நடாத்தியது.
Tamil
நோயாளிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாக கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.
புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கடற்படையினர் புத்தளம், அனவிலுந்தாவை பிரதேசத்தில் தெதுரு ஓயா ஆற்றில் அடைபட்டிருந்த குப்பைகளை அகற்றினர்.
இலங்கை கடலோர காவல்படைக்கு ஒரு தொகை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன . இது கடலோரக் காவல்படையின் எதிர்கால பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இலங்கை கடலோர காவல்படையின் பிராந்திய நடமாடும் பயிற்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ‘எண்ணெய் கசிவு முகங்கொடுத்தல் பயிற்சி பட்டறை’.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அளவு மதிப்பீடு (சிறப்பு) பட்டம் கற்கைநெறி, இலங்கையின் அளவு மதிப்பீடு நிறுவனத்தின் (IQSSL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.
வன்னியில் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடந்த விளையாட்டு விழாவின் போது பாலர் பாடசாலைக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினர்.
ரியர் அட்மிரல் உப்புல் டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022, ஜூன் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (ஜூன் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கிலையார் ஓ நீல் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (ஜூன் 20) சந்தித்தார்.
இலங்கை கடற்படையினர் (SLN) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) 543 கிலோ கேரள கஞ்சாவைக் கைப்பற்றினர். உடப்பு பெரியப்பாடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டஇருந்த போது இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் புத்தர் பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ள 'சம்புத்த ராஜ மண்டபம்' பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் தலைமையில் பெப்பிலியானவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலய வளாகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது (ஜூன் 19).
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் உள்ளடக்கிய தொடர் இரத்ததானப் முகாம்களை இலங்கை கடற்படை ஜூன் 16 அன்று ஏற்பாடு செய்தது.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் உள்ளடக்கி நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் (ஜூன் 16) ஆரம்பிக்கப்பட் டது.
ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது. இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) சேவையை நிறைவு செய்து விடைபெறும் அதன் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.