--> -->
இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (ஜூலை 29) கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
Tamil
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, மியன்மார் அரச நிர்வாக சபையின் தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை ஜூலை 26 மியன்மார் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
புதிதாக புனரமைக்கப்பட்ட தம்புள்ளை ஆரம்ப வித்தியாலயம் (ஜூலை 22) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது மாணவர்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று இன்று (ஜூலை 22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் HBMR ஆரியரத்னவிற்கு இம்மின்சார முச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Francois Garraux இன்று (ஜூலை 22) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை தனது பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு உப கிளையாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ள 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகத்தின் திறப்பு விழா நிகழ்வு இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ கவசப் படையணின் ஏற்பாட்டில் இன்று (ஜூலை 19) கொழும்பு ரொக் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற “Armour Symposium -2024” இல் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார்.
லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீர மாதா' பாராட்டு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜூலை 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.
‘புத்திசாலித்தனம், அறிவு மற்றும் திறமை ஆகியவற்றைக் கொண்டிருப்பது போலவே சரியான அணுகுமுறையும் முக்கியம். மாற்றம் ஏற்படுவது கடினம் மற்றும் சில சமயங்களில் முதல் படியே கடினமானது’.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில டோலகே இன்று (ஜூலை 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.