பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆராய்ச்சி கருத்தரங்கு - 2022

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 'ஆய்வுக் கருத்தரங்கம் - 2022' “மல்டிநோடல் செக்யூரிட்டி டைனமிக்ஸ்” எனும் தொனிப்பொருளின் கீழ் 2022 ஆகஸ்ட் 17 அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி கருத்துக்களை ஆராய்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“பொதுநலவாய விளையாட்டுகள் 2022” போட்டிகளில் இலங்கை பாதுக்காப்பு படை விளையாட்டு வீரர்கள் திறமை

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாதுகாப்பு நியமனம்

திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு  நியமிக்கப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினால் சட்டவிரோத குடியகல்வு முயட்சி முறியடிப்பு

இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் அண்மையில் (31) கைது செய்யப்பட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தவளம்தென்னயில் நிலச்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து இராணுவத்தின் முயற்சியால் வழமைக்கு

58 படைப்பிரிவின் கீழுள்ள 581 பிரிவின் 1 வது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு காலாட்படை படையினர் நேற்று (1) மாலை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிலச்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (ஆகஸ்ட் 01) மாத்தறை, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இராணுவ கடற்படை உதவி

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அவற்றின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்

தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 29). இந்த சந்திப்பு இடம்பெற்றது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தேவையுடையோருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடத்தி வரப்பட்ட ரூபா. 9 மில்லியன் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் இரத்த தானம்

கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தினால் புதிய வீடு அன்பளிப்பு

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சந்திரபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பமொன்றிற்கு அண்மையில் புதிய வீடொன்றை நிர்மாணித்து கையளித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு காக்கைதீவு கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனுராதபுரத்தில் விமானப்படை யினரால் இரத்த தானம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை விமானப்படையின் அனுராதபுரம் தளத்தினால் அண்மையில் இரத்ததான  முகாம் ஒன்று நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினால் அனுராதபுரத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் அனுராதபுரம் பலுகஸ்வெவ மைத்திரிகமவில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர பாதுகாப்பு படை கப்பல் அதிகாரமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர்

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான 'ஜயசாகர' விற்கு ஆணை அதிகாரம் அளிக்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக நகரில் இன்று (ஜூலை, 23)  இடம் பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுப் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படும் வளங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொதுப் பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். 2022 ஜூலை 22 ஆம் திகதி அதாவது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.