--> -->
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரைச் சேர்ந்த அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு 50 மின்சார மோட்டார் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
Tamil
இலங்கைக்கான நைஜீரிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோணி விக்டர் குஜோ,பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, o2) சந்தித்தார்.
கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி, 02) மேற்பார்வை செய்தார்.
இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கேன் கோக்சென் கொக்காயா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 02) சந்தித்தார்.
இலங்கை இராணுவம், டீசல் எரிபொருளில் இயங்கக்கூடிய ஆறு சிலிண்டர் எஞ்சின்கள் கொண்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனத்தை யாரித்துள்ளது.
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.
நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும், தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரனால் ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (26) மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் இன்று (27) காலை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.
சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும்,
கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி,25) தெரிவித்தார்.
ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
காலி கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் அண்மையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.