--> -->
Tamil
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு மஜித் மொஸ்லே இன்று (ஜனவரி, 12) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.
இலங்கை கடற்படையினரால் உஸ்வெட்டகையாவ பிரதேசத்தில் அண்மையில் (ஜனவரி, 09) கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி இந்த சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனது 10வது பீடமான தொழில்நுட்ப பீடத்தை இன்று (ஜனவரி, 10) இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பானது.
பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி, 09) மீட்டுள்ளது.
விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
ஏற்றுமதிக்கான பயிர்செய்கையை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவித்து, அந்நிய செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவப் பொதுச் சேவைப் படையணியினால், குட்டிகலை பிரதேசத்தின் உள்ள படைமுகாம் வளாகத்திற்குள் சுமார் 700 முந்திரிகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்க க்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 வது ஆட்சேர்ப்பு தாதியர் இளங்கலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு , கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 04), பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.
லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் முல்லைத்தீவில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப்பாவனைப் பொருட்களுடன் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
அண்மையில் பெய்த கன மழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு புனரமைப்பு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன, மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் முதலாவது வேலை நாளன்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளதுடன், இந்த சவாலான சூழ்நிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்காக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் இணைய நூலக வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
அரச துறைகளில் 2019 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான ‘ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான’ வெள்ளி விருது விமானப்படைக்கு வழங்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு விமானப்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 10வது தடவையாக இடம்பெறுகின்றது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்காக விமானப்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மையமாகக் கொண்டது.
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.