Tamil
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) காலமான இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் பி.எச்.மென்டிஸின் பூதவுடல் பூரண இராணுவ மரியாதையுடன் புதன்கிழமை (ஜனவரி, 19) நல்லடக்கம் செய்யப்பட்டது. தெஹிவளை - கல்கிசையில் உள்ள ‘நிசல செவன’ மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி பீடத்தை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜனவரி 19) வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
சிப்பாய்களுக்கு இன்றியமையாத அம்சங்களான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சிப்பாயின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால், அவசியமான சந்தர்ப்பங்களில் போரிடுவதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கும் வீரர்களை உருவாக்க முடியும்.
பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'ஜய பிரித்' பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இம்முறை ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணினி பீடத்தால் வெளியிடப்பட்ட சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழின் தொகுதி 01இன் வெளியீடு 01 அண்மையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை இராணுவம் அண்மையில் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
தீகவாப்பி தூபி தளத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட புனித சின்னங்களை மீண்டும் தூபியின் உள்ளக அறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இன்று (ஜனவரி. 17) இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நீலகிரி மகா தூபி’யின் புனரமைப்புப் பணிகளை இன்று (ஜனவரி, 16) பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி’யின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் போட்டி மற்றும் PSA (தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம்) போட்டி நிகழ்வுகள் ஜனவரி 6-9 திகதிகளில் எஸ்எஸ். ஸ்குவாஷ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப் நிகழ்வின் போது பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.
• முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கான தலைமைத்துவ கருத்தரங்கில் பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு மஜித் மொஸ்லே இன்று (ஜனவரி, 12) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பசுமை விவசாயம்’ அடிப்படையாகக்கொண்ட சேதனப் பசளை உற்பத்தித் தளத்திற்குச் சென்று உற்பத்தி செயல்முறைகளை ஆய்வு செய்தனர். இந்த விஜயத்தின் போது செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.
இலங்கை கடற்படையினரால் உஸ்வெட்டகையாவ பிரதேசத்தில் அண்மையில் (ஜனவரி, 09) கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி இந்த சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனது 10வது பீடமான தொழில்நுட்ப பீடத்தை இன்று (ஜனவரி, 10) இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பானது.
பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி, 09) மீட்டுள்ளது.