பாதுகாப்பு செய்திகள்
ஊடக அறிக்கை
மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே!
ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இரண்டு இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் பரிமாற்றம்
இலங்கை விமானப்படை (SLAF) இரண்டு MI-17 ஹெலிகாப்டர்களை மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் (MINUSCA) நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் SLAF விமானப் படை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி சுழற்சி செயல்முறையின் ஒரு பகுதியாக, அங்கு (MINUSCA) சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், அதன் செயல்பாட்டுக் காலத்தை சமீபத்தில் முடித்த நிலையில் இலங்கைக்குத் திரும்பியுள்ளன.
ஊடக அறிக்கை
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
போலந்து பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு
இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.