ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பு திட்டங்களில் தகுதிவாய்ந்த ருவண்டா மாணவர்களை அனுமதிக்ககோரும் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ருவாண்டா குடியரசு புதுப்பித்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.
ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது.
Tamil
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பங்களாதேஷுக்கான கடல் பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலையை எதிர்கொண்ட பாரிய படகு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த படகு அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுதாய நல பணிகளின் ஒரு பகுதியாக தலசீமியா நோய்க்கான 23 சிகிச்சைக் கருவிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சுகாதார அமைச்சிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று (டிசம்பர், 15) கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (ஜய்கா) தலைவர் யமடா டெட்சுகா மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் (டிசம்பர் 14) சமுத்ர ரக்ஷா கப்பலில் இடம்பெற்றது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து பணியாற்றிவரும் இலங்கை படையினரின் முன்மாதிரியான சேவைகளை பாராட்டி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு லெபனானின் நகோரா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகோஷி ஹிடேகி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,15) சந்தித்தார்.
உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021இல் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.