பாதுகாப்பு செய்திகள்
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது
ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது.
மன்னாரில் கடற்படையினரால் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 01 கிலோ மற்றும் 76 கிராம் ஐஸ் ரக போதை பொருளை கைப்பற்றினர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம்
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரைச் சேர்ந்த அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு 50 மின்சார மோட்டார் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நைஜீரிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோணி விக்டர் குஜோ,பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, o2) சந்தித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை பாதுகாப்பு செயலாளர் மேற்பார்வை
கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி, 02) மேற்பார்வை செய்தார்.
துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கேன் கோக்சென் கொக்காயா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 02) சந்தித்தார்.
இராணுவத்தினரால் அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனம் தயாரிப்பு
இலங்கை இராணுவம், டீசல் எரிபொருளில் இயங்கக்கூடிய ஆறு சிலிண்டர் எஞ்சின்கள் கொண்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனத்தை யாரித்துள்ளது.
லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட இராணுவத்தின் பெண் வீராங்கனைகள் அடங்கலான பாதுகாப்புக்குழு நாட்டிலிருந்து பயணம்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை , ஞாயிற்றுக்கிழமை (ஜனகரி, 30) பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
இந்திய குடியரசு தினத்தன்று மறைந்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு நினைவஞ்சலியுடன் மரியாதை
இலங்கை இராணுவ படைகளுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு இலங்கையில் உயிர் நீத்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களின் நினைவு நாளை யாழ்ப்பாணம் பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்தியாவின் 73 வது குடியரசு தினமான புதன்கிழமை (26) நினைவுகூறப்பட்டது.