Tamil
தூய்மையான மற்றும் பாதுகாப்பான கடற்கரை சூழலை உருவாக்கும் நோக்கில் இராணுவ வீரர்களினால் வடிடுவாக் முதல் கொக்கிலாய் வரையான கடற்கரையோர பகுதியை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் வீடற்ற பொதுமக்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் கிழக்கு தலைமையக வளாகத்தில் பிரதேசத்தின் நீரேந்து பிரதேசங்களின் நீரேந்து திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு 1600 மருத மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.
யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் ஆளணி மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு உடுப்பிட்டி, இமயயானன் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படயைணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து உறுவாக்கப்பட்ட 1 இலங்கை இராணுவ படையணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (17) காலை சாலியபுர கஜபா படையணித் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் மேலும் இரண்டு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன.
விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் சில ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் அம்பாறை, பதுல்லை, களுத்துறை மற்றும் பொல்கஸோவிட்ட ஆகிய வைத்தியசாலை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவினால் அண்மையில் கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்று மாலை (ஒக்டோபர்,13) ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலமர்வில் விஷேட பேச்சாளராக இந்திய நாடாளுமன்றஉறுப்பினரும் கல்வியியலாளருமான கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான இராணுவ உயர் மட்ட தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஒக்டோபர், 13) சந்தித்தது.