Tamil
ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான உயர் மட்ட தூதுக் குழு நாளை (ஒக்டோபர், 12) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
அபாயகரமான சரக்குகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் கப்பல்களின் நுழைவு, வெளியேற்றம், மீள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மஹர, பக்மீகஹவத்தை பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 10) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 12) கடம்பே ஸ்ரீ ரஜபவராமயவை சென்றடையவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்ததோடு இராணுவ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை (ஒக்டோபர்,10) முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருவலகஸ்வெவ, ரஜவிகம பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 09) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் என்பனவற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் (ஒக்டோபர், 09) நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அரசாங்கத்தின் "வாரி செளபாக்யா" திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் மகாவலி "எல்" வலயத்தில் காணப்படும் நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பு செய்யும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் நேற்று (ஒக்டோபர், 06) கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் விளையாட்டு ஆர்வம் , இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு “இராணுவ விளையாட்டு பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் 61 பேர் அடங்கிய இந்திய இராணுவ குழாம் நட்பு ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைபுதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ் தீபகற்பத்தில் உள்ள சதுப்புநிலத்தை பாதுகாத்தல் மற்றும் கடலோர அரிப்பை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் அண்மமையல கிலாலி சதுப்பு நிலப்பகுதியில் கண்டல் தாவர கன்றுள் நடப்பட்டது.
எட்டாவது முறையாக இடம்பெறவுள்ள 'மித்ர சக்தி' கூட்டுப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சார்பில் பங்கேற்கவுள்ள 120 இராணுவ வீரர்கள் அண்மையில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கிடையிலான வருடாந்த கூட்டுப்பயிற்சி இம்மாதம் 03ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.