--> -->
தனது விவசாயத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள சிவில் பாதுகாப்புப்படை திணைக்களம் இன்று (செப்டம்பர், 13) அதன் 15 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 72,542 கடலட்டைகள் நேற்றைய தினம் (செப்டம்பர்,12) கைப்பற்றப்பட்டது.
Tamil
முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மொஸ்கோவின் 'VII சர்வதேச இராணுவ விளையாட்டு -2021' போட்டிகளின் கலாசார பிரிவின் சிறப்பான அணிக்கான விருது மற்றும் சிறந்த குழுவிற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது உட்பட பல விருதுகளை இலங்கை இராணுவ நடனக் கலைஞர்களின் குழுவினர் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய வெளிப்படைத் தன்மையான மற்றும் உண்மைத் தன்மை கொண்ட மேடைப் படங்கள் மற்றும் அவற்றின் கலாசார பிரதிபலிப்பு என்பவற்றில் சிறந்த அணிக்கான விருதையும், வாத்திய போட்டிகளில் (டூயட்) முதலிடத்தையும், கலாச்சார ஆடைக்காக இரண்டாமிடத்தையும் பெற்றுகொண்டனர்.
நுவரெலியா டின்சின் தோட்ட வனப்பகுதிக்குள் கடந்த 5ம் திகதி காணாமல் போன யுவதி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1136 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட சுறா மீன்களின் உடற் பாகங்களை லொறி வண்டியில் கொண்டு செல்வதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நடவடிக்கை உடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு அமைச்சும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஹெரோயின் உட்பட பாரியளவிலான பல்வேறு போதைப் பொருள்களும், பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
தொற்றுநோய் நிலைமைகள் தொடர்கின்ற போதிலும் தேசத்தினை நெருக்கடி நிலைக்குள்ளாக்காமல், தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அபிவிருத்தி இலக்குகளுடன் கூடிய ஸ்திரதன்மை அடைய நாம் எப்போதும் பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (செப்டம்பர்,09) தெரிவித்தார்.
முல்லைத்தீவு, கராச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பெர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரகளிடம் அண்மையில் கையளித்தது.
அண்மையில் மிரிஸ்ஸாவில் உள்ள உயர் பயிற்சி மையத்தில், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்ட அதிகாரிகளினால், இலங்கை கடலோர பாதுகாப்புபடை வீரர்களுக்கு ‘தீர்ப்பாயம் தொடர்பாக பயிற்சி’ அளிக்கப்பட்டன.
கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி 02/2021 இன் நிறைவு தின வைபவம் திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப்பிரிவு தலைமையகத்தில் செப்டம்பர் 02ம் திகதி நடைபெற்றது. இதில் பயிற்சிநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த படை வீரர்களுக்கான சான்றிதழ் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.