--> -->
Tamil
பெளத்த சமய அனுஷ்டானங்களுக்காக கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றையதினம் (ஓகஸ்ட், 20) பாணந்துரை ரங்கொத் விஹாரையை சென்றடையவுள்ளது.
2021 பெரும்போக நெற்செய்கைக்காக தேவைப்படும் சுமார் 3,600 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இராணுவத்தினர் உற்பத்தி செய்யவுள்ளனர்.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 19) மாலை ஹொரண குருந்துவத்த மஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் இந்திய அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த இந்திய போர் வீரர்களின் நினைவுத் தூபியில் இந்தியாவின் 75 வது சுதந்திரமான 15 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் 100,000 கிலோமீற்று மாற்று கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அயகமவிலிருந்து கலவான வரையான 16.5 கிலோமீட்டர் நீள பாதையை புணரமைப்பு செய்யும் பணியை இராணுவம் மேற்கொண்டுள்ளது.
பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் சேவை மன்றம் கட்டிடம் கொவிட் - 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 18) மாலை அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
கற்பிட்டி கிளித்தீவு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று (ஓகஸ்ட்,17) கைது செய்யப்பட்டார்.
ரியர் அட்மிரல் வைஎன் ஜயரத்ன இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 ஆகஸ்ட், 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு மருத்துவ தர ஒக்ஸிஜனைக் கொண்டுவர இந்தியாவின் சென்னை துறைமுகத்தை நோக்கி கடற்படைக்கப்பல் ஷக்தி இன்று (ஆகஸ்ட் 17) காலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து வீதி தடைகள் மூலம் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்றைய தினம் (ஓகஸ்ட், 17) வட்டாரம ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.
மதவாச்சி-மன்னார் வீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடியில் 1000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.