அண்மையில் (ஆகஸ்ட் 26) ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பிளாட்டோனோவிச் பத்ருஷேவை சந்தித்தார்.
இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் அங்கோடைதேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு நேற்று (ஆகஸ்ட், 31) கையளிக்கப்பட்டன.
Tamil
பிரதான வைத்தியசாலைகளில் இரத்த மாதிரிகளுக்கு ஏற்பாட்டுள்ள தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயாவில் நேற்று (ஆகஸ்ட் 31) இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பில் உள்ள சர்வதேச விபஸ்ஸனா தியான நிலையம் கொவிட்-19 பாதிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் சிகிச்சைக்காக முதல் இடைநிலை பராமரிப்பு மையம் இலங்கை இராணுவத்தினரால் நேற்றைய தினம் (ஓகஸ்ட், 30) ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் ஆழ் கடல்களில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடி படகில் இருந்து 290 கிலோ மற்றும் 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இன்று காலை (ஓகஸ்ட்,31) கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து உலக சாதனை படைத்தார்.
திட்டமிடப்பட்டவாறு சந்தஹிருசேய தூபியின் நீர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்பதை ஆராயும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அனுராதபுரத்திற்கு இன்று (ஓகஸ்ட் 29) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார பணிகளில் ஒரு பகுதியாக, விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் கல்கமுவ ரணவிரு உபஹார ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (28,ஓகஸ்ட்) கையளிக்கப்பட்டன.
இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கான சீன தூதகரத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.