பாதுகாப்பு செய்திகள்
12 வருடங்களுக்கு பின்னர் கவசப் படையணியின் களத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அமர்வுகள் ஆரம்பம்
கற்பிட்டியிலுள்ள இலங்கை விமானப் படையின் துப்பாக்கிச் சுடும் களப் பயிற்சி தளத்தில், இரண்டு நாள் (செப்டம்பர் 21-22) இளம் கவச படையணி அதிகாரிகளுக்கான பாடநெறி, போர்க்கள கவச வாகன செலுத்துனர்களுக்கான பாடநெறி, துப்பாக்கி பிரயோகம் தொடர்பிலான பாடநெறி ஆகியவற்றை தொடரும் வாய்ப்பு 15 அதிகாரிகள் மற்றும் 130 சிப்பாய்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மீட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வில் பாதுகாப்பு செயலாளரினால் விஷேட சொற்பொழிவு
சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கோஸ்டிகளும் தங்களது வலையமைப்பின் செயற்பாடுகளை சிறைகளுக்குள் இருந்தவாறு தொடர்ந்து முன்னெடுக்க அனுமதித்தல் அல்லது அவர்களின் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்தல் என்பது சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது.
ஊடக அறிக்கை
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல.
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்கள்
ரஷ்யாவில் நடைபெற்ற 58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இணைந்து கொண்டது. இலங்கை இராணுவத்தின் லான்ஸ் காேர்ப்ரல் சஜீவா நுவான் மற்றும் இலங்கை விமானப்படையின் லீடிங் எயார் கிராப்ட் வுமன் கயானி களுஆராச்சி ஆகிய இருவரும் மாெஸ்கோவில் உள்ள தேசபக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இம்மாதம் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச போட்டியில் தங்களின் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்.
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் காயமுற்ற மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
இலங்கை கடற்படை, ஜூலை 26ம் திகதி பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்தபோது காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.
மன்னாரில் 27 மில்லியன் ரூபா பெறுமதியாக கஞ்சா கைப்பற்றப்பட்டது
மன்னார், வலைப்பாடு கடற்பிராந்தியம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 24,) மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 90 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சந்தஹிருசேய தூபி இவ்வாண்டு நவம்பரில் பக்தர்களின் வழிபாட்டுக்கு வழங்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்
சந்தஹிருசேய தூபியின் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, அதுஇந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் வழிபாடுகளுக்காக வழங்கப்படுவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது
வேட்டைகாடு பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 50 கிலோகிராம் ஏலக்காய் என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் அமன்டா ஜுவல் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்றைய தினம் (செப்டம்பர், 23) சந்தித்தது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக இலங்கை அரசசு பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் பிரியாவிடை சந்திப்பு
தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டக், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.