Tamil
அந்தமான் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலர்நிலையுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை பம்பரகலகந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 112வது பிரிகேட்டின் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி அதிகாரிகளிடம் நேற்று (ஆகஸ்ட், 01) கையளிக்கப்பட்டது.
யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
படைவீரர் ஒருவர் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பணிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதால் அவர்களால் செய்ய முடியாது என்று ஒன்றுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.
மனித மூலதனம், வளங்கள் மற்றும் அறிவு என்பவற்றின் அதிகபட்ச பயன்பாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் பயன்படுத்தப்படும்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் - 2021 இல் முதலாம் இலக்க சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் மாற்றுத்திறனாளி வீரர் சார்ஜென்ட் டி.எச்.ஆர் தர்மசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
200 குளங்களை புனரமைப்பு செய்யும், ஜனாதிபதியின் "வாரி செளபாக்ய" திட்டத்தின் கீழ் வெலிஓயா, மகாவலி-எல் வலயத்தில் அமைந்துள்ள 4 குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சந்தஹிருசேய தூபியில் பதிக்கப்படவுள்ள சூடா மாணிக்கம் மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள மினாரா கோபுரம் என்பவற்றை பொதுமக்கள் வழிபடும் வகையில் நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்லொழுக்காற்று கற்கைகளின் மின்இதழ் (Journal of Multi disciplinary Studies ) வெளியீடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் நேற்றைய தினம் (ஜூலை, 28) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு ஒரு தொகுதி அங்கவீனமுற்றோருக்கான உபகரணங்களை வழங்கி வைத்தமைக்காக களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மஹிந்த சரணபாலவுக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மடகலிலிருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 417.2 கிலோகிராம் கேரளா கஞ்சா, கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.