ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
Tamil
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பங்குபற்றுதலுடன் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நேற்று (ஜூலை 19) சர்வ மத நினைவேந்தல் நிகழ்வு விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், நவட்குழியில் பெற்றார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 52வது பிரிவு மற்றும் 523வது பிரிகேட் வீரர்களினால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் திறந்துவைக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்றுநோய் மேலும் பரவலடைவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினால் யாழ் நகரம் சுத்தம் செய்யும் மற்றும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எப்பவாலாவில் அமைந்துள்ள பண்டைய ஸ்ரீ சம்புத்த வீரசிங்கராமயவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஜூலை 17 அன்று நிறுவப்பட்டது.
ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தர' திட்ட பணிப்புரைக்கமைய கெபிதிகொல்லாவ, விஹாரஹல்மில்லேவ ராஜமஹா விஹாரவில் உள்ள பழைய 'சங்கவாசய' (குடியிருப்பு மடாலயம்) இரணுத்தினரால் புனரமைக்கப்பட்டது.
பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் காயமுற்றதன் காரணமாக கடற்படையினரால் நேற்றையதினம் (ஜூலை, 18) கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வட்டக்கச்சி, பெரியகுளம் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. சிவசாமி முத்து குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யக்கூடிய வகையில் பல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் இலங்கை பெற்றுக்கொபல நாள் மீன்பிடி கப்பல்களினை கண்காணிப்பு பொறி முறைக்கு பங்களிப்பு செய்யும் கண்காணிப்பு அமைப்பினை ள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டு அமைச்சு, 'உயர் செயல்திறன்' விளையாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 'விளையாட்டுப் போட்டிகளில் புத்துணர்ச்சியுடனான விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும், விளையாட்டு வீரர்களிடையே விளையாட்டு திறமைகளை மேம்படுத்தவும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடனும், தேசிய விளையாட்டு கவுன்சிலின் தேசிய பரலம்பெம்பிக் கமிட்டியுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது.
டோக்யோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு குறிபார்த்து சுடும் போட்டியில் தகுதிபெற்ற கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் பெட்டி ஒப்பிசர் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது
இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம், கந்தகாடு, மெனிக் பார்ம் மற்றும் ஆண்டியாபுளியங்குளம் இராணுவம் பண்ணைகளில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட காய்ந்த மிளகாய் வைபவ நீதியாக சிறு பயிர்செய்கை இராஜாங்க அமைச்சிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.