பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் வெற்றிகரமாக நிறைவு

வட இந்து சமுத்திர நீரியல் ஆணைக்குழுவின் 20 வது கூட்டத் தொடர் ஜூலை 13 முதல் 15 வரை இடம்பெற்றது, நேற்றைய தின (ஜூலை 15) நிகழ்வினை குறிக்கும் வகையில் திரைநீக்கம் செய்யப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு நேற்று (ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இலங்கையில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைக்கு பாராட்டு

இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் நேற்று (ஜூலை 15) விஹார மஹா தேவி பூங்காவில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு வருகை தந்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா புதிய இராணுவ பிரதம அதிகாரியாக நியமிப்பு

இலங்கை இராணுவத்தில் இரண்டாவது உயரிய நியமனமான இராணுவ பிரதம அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா நியமிக்கபட்டுள்ளார். ஜூலை 17ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீகவாபி தூபியின் முன்னைய மகிமையை மீண்டும் கொண்டுவரப்படும்

மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.    


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

விஹார மகா தேவி பூங்காவில் புதிய தடுப்பூசி நிலையம் ஸ்தாபிப்பு

மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை இலகுவாக்கும் வகையில் இன்று (ஜூலை, 15) முதல் கொழும்பு விஹார மகா தேவி பூங்கா திறந்த வெளியரங்கில் புதிய தடுப்பூசி நிலையம் ஒன்று இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத கஞ்சா செய்கை இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

கொட்டியாகந்துர, குடாஓயா பகுதியில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 12வது பிரிவின் படைவீரர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை பிடுங்கி அழித்தொழிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் மேலும் இரு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரண்டு தேவையுடைய குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத சுறா மீன் பிடியில் ஈடுபட்டோர் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட தடைசெய்யப்பட சுறா மீன் சதைகள் 27 கிலோகிராமை வைத்திருந்ததன் பேரில் மீன்பிடி படகு ஒன்றுடன் சந்தேகநபர்கள் ஐவர் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேல் மாகாண ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஜூலை, 12) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

103 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ் அனலைதீவு கடற்கரைப் பகுதியில்  344.55 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் இன்று (ஜூலை, 12) கைப்பற்றப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கின் கங்கையில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்

கின் கங்கை அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் நீர் வழிப்பாதையை தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் கடற்படை வீரர்களினால் அகற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் வங்காலை கடற்கரையில் நேற்றைய தினம் சுமார் 2 ஆயிரத்து 360 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கஞ்சா செய்கை இராணுவத்தினரால் அழித்தொழிப்பு

மொனராகலை, கெபிலித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை, மத்திய பாதுகாப்புபடை தலைமையகத்தின் கீழ் உள்ள 18வது கெமுனு வோச் படைவீரர்களினால் சுற்றிவளைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானத்துடனும் செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம்

மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் கடற்படையினரும்  இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் இராணுவத்தினரால் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் நடுகை

யாழில் மத ஸ்தலங்கள், அரச காணிகள், இராணுவ முகாம்கள், தரிசு நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்பவற்றில் சுமார் 700க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை யாழ் பாதுகாப்பு படைக் கட்டளையகம் நேற்று (ஜூலை, 10) நடுகை செய்தது.