Tamil
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இன்று (24) ஆரம்பமானது.
மாலியில் ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ குழாம், பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் செயற்பாடுகள், வாகன பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை மேற் கொண்டமைக்காக ஐ.நா.அமைதி காக்கும் பணிகளின் படைத் தளபதியிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.
வவுனியாவில் உள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, 100 கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் கொண்ட புதிய இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றி அமைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் அன்மையில் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமம்து சாத் கட்டாக் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) சந்தித்தார்.
கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட் - 19 தொற்றை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடத்தை புதுபிக்கும்மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை கொவிட்- 19 தொற்றாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றியமைத்து அதனை சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.
தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்த பிரேசில் குடியரசின் இலங்கைக்கான பிரசில் குடியரசின் பிரதி தூதுவர் வின்ஸ்டன் அலெக்சாண்டர் சில்வா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுடன் (ஓய்வு) தனது பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 174.05 கிலோ கிராம் கேரள கஞ்சா,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைபயிற்சி கப்பல்கள், மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்து, இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்களை மேற்கொண்டன.
இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் 45 வது ஆண்டுவிழாவையொட்டி “ஜென் இசட்” எனும் இணையவழி கருத்தரங்கு இலங்கை கம்ப்யூட்டர் சொசைட்டியின் முதல் மாணவர் பிரிவாக ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணனி பீடத்தில் இன்று (மே,20) இடம்பெற்றது.
சிலாபம் முக்கு தொடுவாவ கடற்பரப்பில் மிதந்த நிலையில் காணப்பட்ட 23.1 கிலோகிராம் கஞ்சா கடற்படையினரால் இன்று (ஜூன், 20) கைப்பற்றப்பட்டது.
பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.