சீதுவை இடைநிலை சிகிச்சை மையத்தில் பயன்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவும் ஒரு தொகை நன்கொடை பொருட்கள் நன்கொடையாளர்களினால் இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன.
ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர் வரும் 21ஆம் திகதி அதிகாலை 4.00. மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது இராணுவ மகளிர் படையணி வீராங்கனைகள், படை முகாம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் பயன்படுத்தி 160,000 கிலோ கிராம் சேதன பசளையை உற்பத்தி செய்தனர்.
ஊர்காவற்துறை, கரம்பன் பிரதேசத்தில் 130.76கிலோகிரம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று சந்தித்தார்.
சிலாவத்துறை, கொண்தம்பிட்டி, மன்னார் மற்றும் அரிப்பு ஆகிய கடற்கரைப் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 370.6 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 294.1 கிலோகிராம் பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தனமல்வில பிரதேசத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கையினை அதாவது இலங்கை சிங்க படையணியின் படைவீரர்கள் அன்மையில் சுற்றிவளைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிகேட் படைவீரர்கள், பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீயினை வனவள துறையினருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Tamil
இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார். 1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சமூகநல திட்டங்களில் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அண்மையில் முல்லைத்தீவில் உள்ள மன்னங்கடல் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் உள்ள தடியமலை - முத்தயங்காடு வீதியை புணரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
குண்டசலை மகாமேவுனவ பெளத்த நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வெலிகமை, பொல்வதுமேதர கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 219.8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.