பாதுகாப்பு செய்திகள்
கடற்படையினரால் கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் பணிகள் தொடர்கிறது
கடல் தாவர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் கடற்படையினர் கடற்கரையினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுத்தனர். மேலும் கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்கில் தலைமன்னார் மற்றும் நாச்சிக்குடா பகுதிகளிலுள்ள கண்டல் சூழலில் கண்டல் தாவரங்களையும் நடுகை செய்தனர்.
கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கிவைப்பு
திருகோணமலையில் உள்ள இராணுவத்தினரால் அண்மையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடலில் பயணம் செய்வோர், மீனவ சமூகம அவதானமாக செயற்படவும் - வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தினால் நாட்டின் இலவச கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் 90% சிவில் விரிவுரையாளர்கள், எனவே, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக புதிய சட்ட மூலத்தினால் நாட்டின் இலவச கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜூலை 22).
தெரிவித்தார்.
கிளிநொச்சியில் தேவையுடைய குடும்பங்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 3 புதிய வீடுகள் வீடு கையளிப்பு
அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
வெற்றிலைக்கேணியில் 107 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வெற்றிலைக்கேணி, கடைக்காடு கரையோரப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 107.840 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு வூன்ஜின் ஜியோங்;, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) காலை (ஜூலை 22) சந்தித்தார்.
அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிக்கரம்
தனமல்வில பகுதியில் நடைபெற்ற ‘கம சமக பிலிசந்தரக்’ நிகழ்வின் போது பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கட்டளைகளுக்கிணங்க, இராணுவத்தினரால் சமீபத்தில் இரண்டு பாடசாலை விளையாட்டு மைதானங்களின் புனர் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன.
சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்
சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இலங்கை விமானப் படையினரால் உயிரிழந்த படை வீரர்கள் நினைவு கூறப்பட்டனர்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பங்குபற்றுதலுடன் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நேற்று (ஜூலை 19) சர்வ மத நினைவேந்தல் நிகழ்வு விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், நவட்குழியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், நவட்குழியில் பெற்றார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இராணுவத்தின் 52வது பிரிவு மற்றும் 523வது பிரிகேட் வீரர்களினால் நிர்மாணிக்கப்ட்ட முன்பள்ளி கட்டிடம் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் திறந்துவைக்கப்பட்டது.