பாதுகாப்பு செய்திகள்



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்கள் இராணுவத்தினரால் தொற்று நீக்கம்

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமைய முழங்காவில் பொலிஸ், பொது சுகாதார பிரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபை இராணுவத்தினருடன் இணைந்து முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா நகரங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிலாபத்தில் உலர்ந்த மஞ்சள் மற்றும் வெங்காயம் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் நேற்றைய தினம் 362.95 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571.4 கிலோ கிராம் வெங்காய விதை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழில் தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்வுக்கு இராணுவம் உதவி

யாழ்குடாநாட்டில் 36 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் - 19 தடுப்பு மருந்து ஏற்றல் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையக இராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படை மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையம் சுற்றுச்சூழல் தொடர்பாக ஆராய்வு

இலங்கை கடற்படையின் நீரியல் ஆய்வு சேவையகத்தினால் இயக்கப்பட்ட தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் ஆய்வுக் கப்பல் மூலம் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலின் கடல் பகுதியில் இருந்து நீர் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (ஜூன் 3) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஸ்ரீ பாத மத அனுஷ்டான நிகழ்வுகளுக்கு இராணுவம் உதவி

முன்னைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தவாறு ஸ்ரீபாத யாத்திரை காலம் நிறைவுற்றதை குறிக்கும் வகையில் வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சுமன சமன் விக்ரகம் உட்பட ஏனைய விக்ரகங்கள் ஸ்ரீபாத புண்ணிய தளத்திலிருந்து நல்லதண்ணி விகாரைக்கு 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் அதிமேதகு யூரி மடேரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஜூன், 02) சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மன்னாரில் 8 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் கரையோரப் பிரதேசத்தில் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய படகு ஒன்றும் நேற்றைய தினம் (ஜூன், 01)  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.  


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு கொவிட்-19 நோயாளர்களை பராமரிக்கும் வகையில் இராணுவத்தினரால் மேம்படுத்தப்பட்டது

அக்குரஸ்ஸ வைத்தியசாலை வார்டு ஒன்றினை கொவிட் - 19 தொற்றுக்குள்ளான 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றிடு செய்து , அதை அண்மையில் வைத்தியசாலை அதிகாரிகளிடம்  வழங்கினர். இந்த செயற்பாடு இலங்கை இராணுவத்தின் 3வது ஜெமுனு வாட்ச் மற்றும்  பொறியியலாளர் சேவை படையணி வீரர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோதமாக சுறா மீனின் செட்டைகள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது

மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளை ஒருங்கிணைக்கும் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை வீரர்கள் திக்கேவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடமைகளை மேற்கொண்டிருந்தவேளை, தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் செட்டைகளை வைத்திருந்ததன் பேரில் இரண்டு மீன்பிடி வள்ளங்களுடன் 13 மீனவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறை கோட்டை பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர விசேட ரோந்து நடவடிக்கையின் போது 48.9 கிலோகிரம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கடற்படை வீரர்கள் இரத்த தானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு இரத்த மாதிரிகளில் ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையின் கிழக்கு கட்டளையக கடற்படை வீரர்களினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

40 இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு முயற்சி முறியடிப்பு

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையகம் மே 29 அன்று மன்னருக்கு வடக்கே உள்ள கடல்களில் இலங்கை கடலுக்குள் நுழைய முயற்சித்த  04 மீன்பிடிக் கப்பல்களில் இருந்த  40 மீனவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.