--> -->
Tamil
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் பரவல் நிலையை எதிர்கொள்ளும் வகையில் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையக படை வீரர்களினால் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டது.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் இலங்கை கடற்படை, நேற்று (மே 14) மாலை கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட 'வெப்பமாக்கி ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' (HHOT) அன்மையில் ஜனாதிபதி கோட்டrபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.