--> -->
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
Tamil
கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தல் இதிலிருந்து விடுவிக்க பட்டுள்ளதாகவும் மேலும் சில பகுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் நுகேகொடை, வெள்ளவத்தை மாளிகாவத்தை, மட்டக்குளிய, கெத்தாராம ஆகிய இடங்களில் தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்கு முப்படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இலங்கை இராணுவத்தின் 20வது இலங்கை சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் வெல்லவாயாவில் உள்ள இளைஞர் பயிற்சி மையத்தை ஒரு இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றி வெல்லவாய வைத்தியாலை பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாளை முதல் திங்கள் வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சற்று முன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கடற்படை சினோஃபார்ம் தடுப்பூசியை அரசு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
கந்தளாய் இளைஞர் சேவை நிலையம் 150 படுக்கைகளைக் கொண்ட இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, காலி, இரத்னபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பதின் மூன்று பகுதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (மே 12) அறிவித்தார்.
இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசமாக அறிவிக்கபடுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
400 படுக்கைகளைக் கொண்ட கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக அம்பாறை ஹாட்லிக் கல்லூரி இராணுவத்தினர் மாற்றி அமைத்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் கட்டுமான உதவியுடன் நடைபெற்று வரும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் வார்டு வளாகம் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், அனைத்து கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ரத்து செய்யவும், வணிக நிறுவனங்களில் நுழைந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை மே 30 வரை தனிமைப்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை கடற்படை கொரோன வைரஸ் நோயாளிகளுக்கு 200 படுக்கைகள் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு மையத்தை பூச கடற்படை தளத்தில் திறந்து வைத்தது.
நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவே இது தொடர்ந்து பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மை சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் போலி செய்திகள் மற்றும் அதனால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் கலந்துரையாடல் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அம்பலாந்தோட்டை பிராந்திய வைத்தியசாலையில் உள்ள வார்டுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடைநிலை பராமரிப்பு மையங்களாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் பாரதிபுரம் தனிமைப்படுத்தல் மையத்தை வைரஸ் தொற்றாளர்களை பராமரிக்கு அனைத்து வைத்திய வசதிகளையும் கொண்ட இடைநிலை பராமரிப்பு மையமாக அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.