--> -->
Tamil
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெட்ரோஸ் அதனொம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நேற்றைய தினம் (மே, 07) ஸூம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொடிகாமம் நகர சுற்றுப்பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யவும் பணிகளை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52ஆவது பிரிவு படைவீரர்கள் முன்னெடுத்தனர்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்
ராஜகிரிய பிரதேசத்தில் கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 313 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 47 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹஷிஷ் போதை பொருள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை நேற்று (மே 04) காலியில் உள்ள பூச கடற்படைத் தளத்தில் கோவிட் -19 க்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவியது.
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், வட காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடாத்திய விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 183 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.