பாதுகாப்பு செய்திகள்
தோவ பிரதேசத்தில் 112வது பிரிகேட் படைவீரர்களினால் தீயணைப்பு பணிகள் முன்னெடுப்பு
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிகேட் படைவீரர்கள், பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீயினை வனவள துறையினருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க இயற்கை எய்தினார்
இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார். 1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்
2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.
முல்லைத்தீவு சமூக நல திட்டங்களில் இராணுவமும் கைகோர்ப்பு
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் சமூகநல திட்டங்களில் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அண்மையில் முல்லைத்தீவில் உள்ள மன்னங்கடல் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டம் கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடலில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் தமது வீரர்களுக்கு ஜெட் ஸ்கை ஒபரேட்டர் பயிற்சி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு தடியமலை - முத்தயங்காடு வீதி இராணுவத்தினரால் புணரமைப்பு
முல்லைத்தீவில் உள்ள தடியமலை - முத்தயங்காடு வீதியை புணரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
குண்டசாலையில் 1000 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் ஸ்தாபிப்பு
குண்டசலை மகாமேவுனவ பெளத்த நிலையம், சுகாதார பிரிவு| அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் 1000 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
1758 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வெலிகமை, பொல்வதுமேதர கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 219.8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் மரக்கறிகள் இராணுவத்தினரால் விநியோகிப்பு.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை சட்டத்தின் கீழ் உள்ள 59வது பிரிவின் படைவீரர்கள், அலம்பில், விடாகரை, கள்ளப்பாடு, செல்வபுரம், வன்னிகுளம், முள்ளியாவெளி மற்றும் வட்டுவாக்கல் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் மரக்கறிகளை அண்மையில் விநியோகம் செய்தனர்.
அன்டனோவ் - 32 ரக மூன்று விமானங்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு
மாற்றியமைக்கும் செயல்முறை நிறைவு செய்யப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று அன்டோனோவ் -32 ரக விமானங்கள் நேற்று (ஜூன் 11) மாலை நாடு திரும்பியுள்ளன.
பாவனைக் உட்படுத்த முடியாத வாகனங்கள் கடலுக்கடியில்
இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (ஜூன் 11) நெடுந் தீவில் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை செயற்கையாக விருத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவிப்பு
அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லேவிற்கு (நன்றி தெரிவித்தார்.
தென் சூடானில் கடமையாற்றும் இலங்கை இராணுவ மருத்துவ குழுவுக்கு பாராட்டு
தென்சூடான் போர் நகரில் நிறுவப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 7வது குழு சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டாம் நிலை வைத்தியசாலையின் பணிகள் பாராட்டத்தக்கவைகளாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.