பாதுகாப்பு செய்திகள்
வெள்ள அனர்த்த எச்சரிக்கை தளர்வு
ஜூன் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வழங்கிய வெள்ள அனர்த்த எச்சரிக்கைகள் இன்றைய தினம் முதல் தளர்த்தப் படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீகவாபி தூபியின் மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு
தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் இன்று (ஜூன், 10) இடம்பெற்றது.
தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பு
தென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர் நகரத்திலிருந்து ஜூபா மற்றும் என்டெப்பே நகர்களுக்கு அனுப்பும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவர் நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பிரியங்கி அமராபந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10 , 11 ல் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்
சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முப்படையினரால்விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகளுடன் சந்தேகநபர் கடற்படையினரால் கைது
மன்னார் வங்காலை கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 70 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 514 கிலோகிராம் பீடி இலைகள் என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
75மிமீ க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் - வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகவீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார். கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கம்பஹா வெரெளவத்தையில் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு
கடற்படையினரால் கம்பஹா, வெரெளவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் (ஜூன், 7) திறந்து வைக்கப்பட்டது.
உடனடியாக தரையிறங்கிய விமானப்படை விமானம் பாதுகாப்பாப்பாகவுள்ளது
இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சி விமானம் (செஸ்னா 150) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை , நிலாவெளி, இறக்கக்கண்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் படையினரின் நடவடிக்கைகள்
கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசரகால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் ஆய்வு
தீ அனர்த்தத்திற்கு உள்ளன எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றனவா என்பன தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.