Tamil
ராஜகிரிய பிரதேசத்தில் கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 313 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 47 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹஷிஷ் போதை பொருள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை நேற்று (மே 04) காலியில் உள்ள பூச கடற்படைத் தளத்தில் கோவிட் -19 க்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவியது.
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், வட காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடாத்திய விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 183 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
காலி, ஜின் கங்கையின் வக்வெல்ல பாலத்தின் கீழ் ஒன்று சேர்ந்த குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப்பொருட்களை கடற்படையினர் நேற்று (மே 1) அகற்றினர்.
இலங்கை கடற்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கடல்சார் மாநாடான 'கோல் டயலோக் - 2021" கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வதே கடல்சார் மாநாடு, இம்மாநாடு தொடரின் பதினோராவது தடவையாகும்.
இன்று மே 02ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1716 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109,861ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தேவிபுரம் மத்திய கல்லூரி வளாகம் இராணுவத்தின் 18ம் விஜயபாகு காலாட்படை பிரிவினரால் அண்மையில் சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி முதல் நாவற்குழி வரையிலான வீதியோரங்களை சுத்தப்படுத்தும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு யாழ் பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.