Tamil
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சீன நாட்டின் கவுன்சிலர் கவுன்சிலர் பாதுகாப்பு அமைச்சருமான வெய் பெங் இன்று காலை (ஏப்ரல் 29) நாடு திரும்பினார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் வருகை
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மொனராகலை அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலில் கடமை புரியும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவம், எப்.வை.எப்.ஏ. தன்னார்வ அமைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோருடன் இணைந்து வெலிகந்த, கவுதகல வனப்பகுதியில் 1000 உள்நாட்டு மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.
சீன நாட்டின் கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் இன்று காலை (ஏப்ரல் 28) நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ சிவில் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான புங்குடுதீவில் இருந்து நயினாதீவு வரை பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச் செல்லும் செயலிழந்த படகு திருத்தம் செய்யப்பட்டது.
சீன தேசத்து கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீ ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் ( ஏப்ரல், 27) இலங்கையை வந்தடைந்தார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (ஏப்ரல் 27) காலை தெறிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் மாற்றுத்திறனாளிகளான போர்வீரர்கள் அண்மையில் ஹிக்கடு சர்வதேச சுழியோடல் பயிற்சி பாடசாலையில் விஷேட ஸ்கூபா-சுழியோடல் பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.