Tamil
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டினை நினைவுகூறும் அதேசமயம், 2021 ஏப்ரல் 4ம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுதப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை
வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை கள பொறியியல் படையணி பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவினால் திறந்துவைக்கப்பட்டது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான முதுமாணி கற்கைகள் மார்ச் 30ம் திகதி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மன்னார், பேசலை கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
காங்கேசந்துறை, திஸ்ஸ ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின்போது, யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை விமானப்படை அதன் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தியுல்வெவ பிரதேச மக்களுக்கான ஒரு குடிநீர் திட்டத்தை வைபவரீதியாக அண்மையில் கையளித்தது.