“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம், திறமையாக செயல்படுவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tamil
ஹல்டும்முல்லவில் உள்ள வெலு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் அவரது மகனின் உடல்கள் படையினரால் இன்று (ஏப்ரல் 16) காலை மீட்கப்பட்டுள்ளது.
விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் நேற்றைய தினம் (ஏப்ரல்,15) அவர் கோப்ரலாக தரம் உயர்த்தப் பட்டார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ரன்விஜய் 'மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று (ஏப்ரல்,14) வந்தடைந்தது.
அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமானதாக சிங்கள, தமிழ் புத்தாண்டு அமையட்டும் என பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழ் கிராண்ட் பஸார் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இந்து சமய சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெற்ற சிறிய வைபவத்தின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.