பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மலே வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கான விஜயம் ஒன்றினை இன்று (ஏப்ரல், 09) மேற்கொண்டனர்.
Tamil
போர் வீரர்களுக்கு பாதுகாப்பு போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ரணவிரு சேவா அதிகாரசபைக்கு இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ரணவிரு சேவா அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (08) கூடியது.
பணயக்கைதிகளை மீட்டல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் பாடநெறி மற்றும் போர் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களை பயன்படுத்தல் தொடர்பான உயர் தர பாடநெறிகளை வெற்றிகரமாத பூர்த்தி செய்த இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் நேற்று (ஏப்ரல் 7) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கான அடையாள சின்னத்ததைப் பெற்றுக்கொண்டனர்.
சிலாவத்துறை, கொண்டச்சிகுடா தெரு மேற்கொள்ளப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு மலேய் வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 05) விஜயம் செய்தார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டினை நினைவுகூறும் அதேசமயம், 2021 ஏப்ரல் 4ம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுதப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை