Tamil
"தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்ற வகையில் நாம், வெறுப்பு அரசியலை விதைத்து சமாதானத்தை சீர்குலைப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
நீண்டகாலமாக தேவையுடைய நிலையில் காணப்பட்ட கிரிபவ மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் புனர்நிர்மான பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் அல்லை பகுதி ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 4வது விஷேட படையணி வீரர்களினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ் - பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் ' யாழ் - கரிட்டாஸ் - மனித மேம்பாட்டு மையம்' ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் எலுதுமடுவல் பிரதேசத்தில் மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தன.
நேற்று (மார்ச், 11) கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித கௌரவம், ஒருமைப்பாடு, ஜனநாயக பிரசன்னம், நிலையான வளர்ச்சி, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமத்துவ வாய்ப்பு போன்றன பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியின் முக்கிய பெறுமதிகளை பல்கலைக்கழக கல்வியினூடாக வளர்க்க முடியும் என்பதை நாம் எப்போதும் நம் மனதில் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ, மார்ச் 09ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டnபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி, சோமாதீவு பகுதியில் நேற்று (மார்ச் 8) இடம்பெற்ற விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 107 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரால் கர்ப்பிணி மற்றும் விதவைப் பெண்களுக்கு 1,000 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ், சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இன்று மார்ச் 09ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 344 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86,038அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை புத்தளம் சேரக்குளிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.