பாதுகாப்பு செய்திகள்
2021 ஆண்டுக்கான முதுமாணி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான முதுமாணி கற்கைகள் மார்ச் 30ம் திகதி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் ரூ. 13.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது
மன்னார், பேசலை கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
யாழ் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்
காங்கேசந்துறை, திஸ்ஸ ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின்போது, யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது
கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விமானப்படையினரால் தியுல்வெவ மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள்
இலங்கை விமானப்படை அதன் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தியுல்வெவ பிரதேச மக்களுக்கான ஒரு குடிநீர் திட்டத்தை வைபவரீதியாக அண்மையில் கையளித்தது.
திக்கோவிட்ட துறைமுகத்தில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (29) பல நாள் மீன்பிடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகு ஒன்றில் ஏற்பட்ட தீயினை கடற்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஓமந்தை மரையிலுப்பைக்குளத்தில் ஏற்பட்ட உடைப்பு இராணுவத்தினரால் சீரமைப்பு
ஓமந்தை, இலைமறந்தான் குளம் பிரதேசத்தில் உள்ள மரையிலுப்பைக் குளத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினை தடுத்து நிறுத்த இராணுவத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். நீர்கசிவு காரணமாக குளக்கட்டு உடைப்பெடுப்பதை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினரால் மக்கள் நலன் கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.