--> -->
Tamil
புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.
தேசிய மாணவர் படையணியின் 13ஆவது பணிப்பாளராக மேஜர் ஜெனரல (ஓய்வு) பி.டபிள்யு. பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, துருக்கி, கட்டார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 159 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்று (டிசம்பர் 29) வெளியேறினர்.
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 63 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து கொண்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து (டிசம்பர் 28) வெளியேறியதாக இலங்கை விமானப் படை தெரிவித்தது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42,062 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அங்கு வைக்கப்பட்டுள்ள புனித தந்தத்திற்கு இன்று (டிச 29 ) மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா> சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 674 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41,053 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40,379 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2004 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலலையினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (டிசம்பர், 26) காலை 09.25 மணிக்கு நாடு தழுவிய இரண்டு நிமிட மெளனாஞ்சலி செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.