பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்
பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா> சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,700 ஆக அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 674 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41,053 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ருவன்வெலிசேய வளாகத்தில் 800வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
நாட்டில் 13,516 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40,379 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமியின் 16வது ஆண்டு நினைவு தினம் இலங்கையினால் அனுஷ்டிப்பு
2004 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலலையினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (டிசம்பர், 26) காலை 09.25 மணிக்கு நாடு தழுவிய இரண்டு நிமிட மெளனாஞ்சலி செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பாகங்களில் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,338 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 551 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,781 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நத்தார் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும். இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது. சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.