பாதுகாப்பு செய்திகள்
விமானப்படையின் 'கபீர்' படைப்பிரிவு வெள்ளி விழாவை கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படையின் “லயன் கப்ஸ்” என பரவலாக அறியப்பட்ட 10-வது போர் படைப்பிரிவு ஜனவரி 5ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ‘வெள்ளி விழாவை’ கொண்டாடியது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வடமேற்கு கடலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1680 கிலோ உலர்ந்த மஞ்சள் மற்றும் 150 கிலோ ஏலக்காய் என்பவற்றுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் 12,456 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 522 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46,247 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவிக்கரம்
கிளிநொச்சி பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,261 ஆக அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 484 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,725 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 05) சந்தித்தார்.
மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் அம்பலாந்தோட்டையில் ஸ்தாபிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பலாந்தோட்டை சியம்பலாகோட்டையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்குள்ளான 565 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 468 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,241 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அரசத் துறை நிறுவனங்கள் இராணுவத்தினால் கையகப்படுத்தவில்லை - பாதுகாப்பு செயலாளர்
இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திட்டமானது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் எனவும் அரச நிதியை சேமிக்கும் பொருட்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரினால் ஆரம்பித்து வைப்பு
ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மற்றுமொரு சேவையான இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (ந-டுயனெ சுநபளைவசல ளலளவநஅ) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் மேலும் மரக்கன்றுகள் நடுகை
இராணுவத்தினரால் அண்மையில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கரையோரங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் 7,500 அரிய வகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,251 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 403 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,773ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.