பாதுகாப்பு செய்திகள்
படை வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான நன்கொடை நிதியினை ரணவிரு சேவா அதிகாரசபை பெற்றுக்கொண்டது
ரணவிரு சேவா அதிகார சபைக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உளர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்ன சிப்பிகுளம் பிரதேசத்தில் இராணுவத்தினரால் 300 மரக்கன்றுகள் நடுகை
சின்ன சிப்பிகுளம் பகுதியில் இராணுவத்தின் 213 ஆவது பிரிகேட் படையினரால் சுமார் 300ற்கு மேற்பட்ட வேம்பு, நாகை, மா ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
பொதுமக்களின் பணத்திலிருந்து பராமரிக்கப்படும் சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்
நீங்கள் இணைந்து கொண்டுள்ள இந்த துறையில் உங்களின் திறன்களை அதிகரித்துக் கொள்வதும் அதற்கேற்ப செயற்படுவதும் அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் கடற்படை தளத்திற்கு விஜயம்
திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணம்
இலங்கை இராணுவம் சீகிரிய, கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடொன்றை நிர்மாணித்துள்ளது.
ஆயுதப் படையினர்; தேசத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான பங்களிப்புக்களை பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.