பாதுகாப்பு செய்திகள்
மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க செயற்பட வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
இராணுவ தலைவர்கள் இன்று போன்று என்றுமே சகல துறைகளிலும் பங்களிப்பு செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) தெரிவித்தார்.
அயகம மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்புச் செயலாளரினால் அங்குரார்ப்பணம்
தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற்படும் அயகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன, அயகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில் 418 மில்லியன் ...
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சிற்கு சீன தூதரகம் ரூ.25 மில்லியன் நன்கொடை
கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்காக இலங்கைக்கான சீன தூதரகம் இம்மாதம் 15ம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நிறைவு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மூன்று நாட்களாக இடம்பெற்று வந்த அபாய முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளல் தொடர்பான சர்வதேச இணைய மூல கருத்தரங்கு நேற்றையதினம் நிறைவுற்றது.
இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு
இலங்கை சமிக்ஞை படையணியின் கேர்னல் கொமடாண்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, இராணுவத்தின் 56வது பிரதம அதிகாரியாக தனது கடமைகளை இராணுவத் தலைமையகத்தில் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளை பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு செய்தார்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.
இராணுவ சேவா வனிதா பிரிவு தனக்கென முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜயவர்தனபுரயிலுள்ள, இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவா வனிதா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (டிச. 15 ) நடைபெற்றது.
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் கந்தளாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகரக பயிற்சி விமானம் கந்தளாய், சூரியபுர பிரதேசத்திலுள்ள வயல் காணியில் இன்று (15) விழுந்து விபத்துக்குள்ளானது.