--> -->
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 541 பேர் நேற்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8,413 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளங் காணப்பட்ட அனைவரும் உள் நாட்டுப் பிரஜைகள் என அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடத்தலுக்கு தயாரான நிலையில் பேசாலை, ஒலுத்துடுவை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.9 கிலோகிராம் கேரள கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
Tamil
புதிதாக தொற்றுக்கு உள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,872 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
கொழும்புக் கோட்டை, புறக்கோட்டை, பொரள்ளை மற்றும் வெலிக்கடை போலீஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிஹிந்து மகா தூபி, மிஹிந்து குகை மற்றும் நினைவுச்சின்ன மாளிகை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலுக்கு அமைய மகாமேவனவ பொளத்த மடாலயத்தின் தலைவர் வண. கிரிபத்கொட ஞானநந்தா தோரின் பங்களிப்புடன் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7521 ஆக அதிகரித்துள்ளது....
கொழும்பு மாவட்டத்தின் கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 7.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் உயிரிழந்ததையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
வழமையான நன்கொடையாளர் என அறியப்படும் திருமதி. தனுஜா விஜேசிரி டயஸ், அவரது நண்பர்களுடன் இணைந்து யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நன்கொடை பொருட்களை வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்தை இராணுவத்தினர் சுகாதார அதிகாரிகளிடத்தில் நேற்று கையளித்தனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 60 பேர் கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றதையடுத்து நாட்டில் கொரோனா . . .