--> -->
இலங்கை இராணுவம் 71வது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும் (ஒக்டோபர்,10) .
Tamil
சமூக ஊடக வலைத்தளங்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச பிரக்டிகள் ஷூட்டிங் அமைப்பினால் கண்டியில் நடாத்தப்பட்ட ‘ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப்- 2020’ போட்டியில் இலங்கை விமானப்படை ஷூட்டிங் குழுவினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்துள்ளதுடன், கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை பேணி மீண்டும் பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்வதாக பொலிஸ் சட்டம், ஒழுங்குகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் இலங்கை கடற்படையினரர், கொழும்பு கோட்டையில் மாகாணங்களுக்கிடையிலான பிரதான பயணிகள் போக்குவரத்து நிலையங்களில் கிருமி தொற்று நீக்க செயற்பாடுகளை நேற்று (ஒக்டோபர், 8) முன்னெடுத்துள்ளனர்.
கொட்டகல பகுதி மக்களின் இரு பக்கங்களுக்குமான போக்குவரத்தினை தடைசெய்யும் வகையில் வீதியின் நடுவே வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை அனர்த்த நிலைமைகளின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை தேடி கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்
கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளலவும் பொலிஸ் தொடர்பான ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ளவும் பின்வரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கம்பஹா மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான தலைமையகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் ஊடாக எதிர்வரும் 7,8 மற்றும் 9ம் திகதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் தொற்று சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 466 தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.
உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினால் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அரசாங்க அதிபர்கள் / மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 05) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
வேயாங்கொடை பொலிஸ் பிரிவில் இன்றுமுதல் ( ஒக்டோபர், 04)உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.