பாதுகாப்பு செய்திகள்
8,743 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு
நாட்டில் 8,743 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் இதில் வைரஸ் தொற்றுக்குள்ளான 401 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி -வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்குப் பிராந்தியத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கண்றுகள் படையினரால் நடுகை
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒரே நாளில் மரக்கன்றுக்கள் நடும் மாபெரும் திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் ஒரே நாளில் 100,000 அரிய வகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் படைக் குழுவினர் இராணுவத் தளபதியினால் வழியனுப்பி வைப்பு
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக தென் சூடான் பயணமாகும் 7வது படைக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழியனுப்பி வைத்தார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவர் அமைதிகாக்கும் பணிகளுக்காக செல்ல உள்ள படைக்குழுவினரை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,806 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,806 அதிகரித்துள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை 17674 ஆக பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில் இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்'
இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக போர் வீரர்கள் ஞாபகார்த்த 'பொப்பி மலர் தினம்' நேற்று கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் உள்ள நினைவுத் தூபியில் இடம் பெற்றது.
வெடிப்புக்குள்ளான குளத்தின் அணைக்கட்டு படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு அனர்த்தங்கள் தடுப்பு
வெடிப்புக்குள்ளான ஊத்துக்குளத்தின் அணைகட்டு கொக்கெலியவில் உள்ள படையினரால் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் மூலம் பரந்தளவிலான பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கும் மற்றும் தாழ்நில கிராமங்களுக்கும் ஏற்பட இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
பாணலுவவில் இராணுவத்தினரால் நெற்செய்கை
துந்தன பாணலுவ இராணுவ பயிர்ச்செய்கை காணி மற்றும் பணாகொடை இராணுவ முகாம் ஆகிய தெற்கு பாதுகாப்புப் படையினரால் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 11324 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11324 பதிவாகியுள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 5206 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிரிஸவெட்டிய மகா சேயவில் பெளத்த மத அனுஸ்டானங்கள் முன்னெடுப்பு
அனுராதபுர மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு
அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
சேருவாவிலவில் இராணுவத்தினரால் 10 ஏக்கர் நெற்செய்கை
கந்தளாய், சேருவாவில பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிற்செய்கை மேற்கொள்ளப்படவிருந்த 10 ஏக்கர் வயல் காணியில் இராணுவத்தின் 22வது விஜயபாகு காலாட்படை வீரர்களினால் நெற் செய்கைக்கான விதைநெல் வீசப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.