--> -->
Tamil
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் நாளை (14) முதல் மேல் மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கு, பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இறுதியாக 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதை அடுத்து,
திட்டமிட்ட குற்றச்செய்லகளை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பான தேசம் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் அரசின் தூரநோக்கு கொள்கையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (செப்டம்பர் , 11) சந்தித்தார்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொது நிர்வாகம், திட்டமிடல் சேவைகள், கணக்கியல் சேவை, முப்படைகள், பொலிஸ், சிறைச்சாலைகள், சுங்கத் திணைகளங்கள் என்பன ஒரு தனித்துவமான அரச நிர்வாக பொறிமுறை அமைப்பின் பிரகாரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப
இலங்கை கடற்படையினருடன் இணைந்து அதன் மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுழியோடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற இன்று (11) தெரிவித்தார்.
ஜேர்மன் நாட்டின் டிசாசு நகரில் இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.16 செக்கன் வேகத்தில் ஓடி முடித்து தேசிய ரீதியில் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இழுத்துச்செள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா இன்று (10) தெரிவித்துள்ளார்.
கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான ஐம்பது திரவ கலன்களை பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் நேற்று(9) அன்பளிப்பு செய்துள்ளனர்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் புதிய ஆய்வக்கூடம் ஒன்று நேற்று (8) திறந்துவைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ சீ ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை மேலும் 300ஆல் அதிகரிக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பலிலிருந்து இன்று (09) எதுவித தீப்பிழம்புகளோ அல்லது புகையோ அவதானிக்கப்படவில்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள காற்றுடன் கூடிய வானிலை மற்றும் தொடர் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலர் இரசாயன கலவைகளை வீசுவதன் மூலம் எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ, ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
புத்தளத்தில் 10 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்த மேற்கொண்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த குறித்த தங்கத்தை அதிரடி படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 59வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரினால் எழுதப்பட்ட 'கோட்டாபய' என்னும் சிங்கள புத்தகத்தின் ஆங்கில பதிப்பும், பாதாள உலக செயற்பாடுகளின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நாவல் வடிவிலான 'பாத்தாளயோ' எனும் நாவலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.